உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
1.
உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்க வேண்டும்
கள்ளம் நீங்கி கால்மெல்லாம்
வாழ வேண்டும் – உந்தன்
2.
பாவமான சுபாவம்
எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி
என்றும் நடத்த வேண்டும் – உந்தன்
3.
ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும் – உந்தன்
4.
வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்- உந்தன்
5.
ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும் – உந்தன்